Thursday, 16 January 2020


வணக்கம்,
இந்த இணையதளத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.ஃபெயித் பவுண்டேஷன் மிஷன் டிரஸ்ட் என்கிற இந்த சமூக நல அறக்கட்டளை மக்களின் நல்வாழ்வுக்கு என்றும்,மருத்துவ உதவிகள் விழிப்புணர்வு முகாம்கள நடத்தவும், ஏழைகளுக்கு நல உதவிகள் செய்யவும்,பெண்களுக்கு சுய வேலை வாய்ப்புகளை உண்டாக்கவும் தொடங்கப்பட்டது. இந்த டிரஸ்ட் Rev.J.பிராங்க்ளின் பிரபு அவர்களால் தொடங்கப்பட்டு 2007-ம் வருடம் அரசு பதிவு செய்யப்பட்டது.அதற்கு பிற்பாடு இந்த டிரஸ்ட் மூலம் பல்வேறு சமூக உதவி செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் 2009 ம் வருடம் (மேனேஜிங் டிரஸ்டி)J.பிராங்க்ளின் பிரபு அவர்கள்(எதிர்பாராத விபத்தின் மூலம் இறந்து விட்டார். )அதற்கு பிற்பாடு அவருடைய மனைவி திருமதி.குளோறி பிராங்க்ளின் அவர்கள் (மேனேஜிங் டிரஸ்டியாக)பொறுப்பு ஏற்றார்.தலைவராக Rev.J.டேவிட் குமார் அவர்களும் ,செயலாளராக Rev.J.மோசஸ் விஜயன் அவர்களும் பொறுப்பு ஏற்றனார்.இதன்பின்பு பல்வேறு கிராமங்களில் இலவச கண் சிகிஷ்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதன்மூலம் ஏழை எளிய மக்கள் கண் பார்வையடைந்து வருகின்றனார்.ஏழை பிள்ளைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும்,எழுது பொருட்கள், ஸ்கூல் பேக்குகள் வழங்கப்பட்டு வருகிறது.ஏழை மக்களுக்கு இலவச உடைகள்,மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கு உணவு முடிந்த அளவு வழங்கி வருகிறோம்.
தொடர்ந்து மரக்கண்றுகள் நடுதல் ,விழிப்புணர்வு முகாம் நடத்துதல்,இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறோம்.தொடர்ந்து முதியோர்களுக்கு முதியோர் இல்லம் கட்டி பராமரிக்கவும்,பெண்களுக்கு சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கவும்,(இலவச தையல் பயிற்சி ,கேரி பேக் பின்னுதல்,சுய வேலை வாய்ப்பு ) உருவாக்க முயிற்சித்து வருகிறோம்.பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறுபிள்ளைகளுக்கு சிறுவர் காப்பாகம் கட்டவும்,கல்வி நிலையங்கள் உருவாக்கிடவும்,உடல் ஊனமுற்றோர்களுக்கு காப்பாகம் கட்டி பராமரிக்கவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.
நன்றி! நன்றி !! நன்றி !!!

The Faith Foundation Mission Trust, a social welfare trust, was launched to promote the well-being of the people, conduct medical camps, help the poor, and create self-employment opportunities for women. The Trust was founded by Rev. J. Franklin Prabhu in 2007 and was subsequently funded by the Trust, which was later funded by various trustees of the Trust. He was followed by his wife, Mrs. Glory Franklin (Managing Trust) Rev.J.David Kumar as the head and the Rev.J.Joseph Vijayan as the secretary. After this, free eye camps are being conducted in various villages. School supplies are being supplied with stationery and poor people Free T-shirts, and children abandoned by parents who are providing the food as much as possible.
Marakkanrukal Following planting, conducting awareness camps, free medical camps conducted varukiromtotarntu Retirement Home for the Elderly Maintain building, self-employment opportunities for women, (free sewing lessons, carry bag knitting, self-employment) for young children abandoned by varukiromperrorkal muyircittu generate Kappa Phase, educational institutions, creation of physical handicap and maintain Hostal continue building see God in the laughter.
Thanks! Thanks !! Thanks !!!